ETV Bharat / bharat

இவிஎம் மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது - பிரதமர் மோடி - PM Modi on Gujarat polls

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் கட்சி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குற்றம் சாட்டுவது தோல்வியை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டதை காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இவிஎம் மீது குற்றம் சாட்டும் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது

author img

By

Published : Dec 2, 2022, 8:13 PM IST

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுவது தோல்வியை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டதை காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று(டிசம்பர் 1) நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவுக்கான பரப்புரையில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

அந்த வகையில், குஜராத்தின் படான் நகரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் இன்று (டிசம்பர் 2) உரையாற்றினார். அப்போது மோடி கூறுகையில், நேற்றைய வாக்குப்பதிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டது. இது முன்கூட்டியே தோல்வியை ஏற்றுக்கொண்டதை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 2 விஷயங்கள் மட்டுமே தெரியும். ஒன்று, தேர்தலுக்கு முன் மோடி குறித்து அவதூறு பேசுவது, மற்றொன்று தேர்தலுக்கு பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை குறை கூறுவது.

காங்கிரஸ் ஆட்சியின்போது நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பிளவு மேலும் வலுப்பட்டது. ஏழைமக்களுக்கான நிதி கொள்ளையடிக்கப்பட்டது. மத்திய அரசு அனுப்பும் 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே ஏழைகளுக்குச் சென்றடைகிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் 85 பைசாவை யார் கொள்ளையடித்தது என்று மக்கள் சிந்திக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு: மைக்கேல் ஜேம்ஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.