ETV Bharat / bharat

சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் அறிவிப்பு... ஜெட் வேகத்தில் போகும் காங்கிரஸ் கட்சி!

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளத சத்தீஸ்கர் மாநிலத்தில் துணை முதலமைச்சர் வேட்பாளராக டி.எஸ். சிங் தியோவை நியமித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டு உள்ளார்.

TS Singh Deo
TS Singh Deo
author img

By

Published : Jun 28, 2023, 10:52 PM IST

டெல்லி : சத்தீஸ்கர் மாநிலத்தின் துணை முதலமைச்சராக டி.எஸ். சிங் தியோவை நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் வழங்கி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவைப்படுகின்றன. தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 71 எம்.எல்.ஏ.க்களை கொண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது.

சத்தீஸ்கர் முதலமைச்சராக பூபேஷ் பாகெல் உள்ளார். நடப்பாண்டு இறுதியில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் தக்கவைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருகிறது. அதேநேரம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக போராடி வருகிறது.

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் துணை முதலமைச்சராக டி.எஸ். சிங் தியோவை நியமித்து காங்கிரஸ் அறிவித்து உள்ளது.

அவர் தற்போதைய பூபேஷ் பாகெல் ஆட்சியிலும் துணை முதலமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது. டி.எஸ். சிங் தியோவை துணை முதலமைச்சராக நியமிக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைமையிடம் ஒப்புதல் அளித்து உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், மாநிலத்தில் சிங் தியோவை துணை முதலமைச்சராக நியமிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது. சத்தீஸ்கர் மாநில அரசில் துணை முதலமைச்சராக டி.எஸ். சிங் தியோவை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சிங் தியோ ஒரு விசுவாசமான காங்கிரஸ் தலைவர் மற்றும் திறமையான நிர்வாகி என்றும் துணை முதலமைச்சராக அவர் செய்த சேவையால் மாநிலம் பெரிதும் பயனடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் சத்தீஸ்கர் மக்கள் காங்கிரஸ் கட்சியை அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிய அமைப்பார்கள் என்று நாங்கள் நம்புவதாக அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம்... மக்கள் குஷி! எங்க தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.