குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் உள்ள நூற்றாண்டு கடந்த கேபிள் பாலம், அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று (அக் 30) விடுமுறை தினத்தை முன்னிட்டு, அதிகளவிலான மக்கள் பாலத்தில் இருந்தனர்.
அப்போது திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இதில் இதுவரை 132 பேர் உயிரிழந்தனர். மேலும் தேசிய மீட்புப் படையினர், இந்திய காவல் படையினர் மற்றும் இந்திய ராணுவம் ஆகியோர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோகமான நிகழ்வினால், பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நாளை (நவ 1), பாஜகவின் பேஜ் கமிட்டி உறுப்பினர்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற இருந்தார். இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக ஊடக ஒருங்கிணைப்பாளர் யுக்னேஷ் தேவ் தெரிவித்துள்ளார். அதேபோல் இன்று (அக் 31) குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடங்கவிருந்த ‘பரிவர்த்தன் யாத்ரா’ நாளை நடத்தப்படும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்து; 60க்கும் மேற்பட்டோர் பலி; பிரதமர் நிவாரணம் அறிவிப்பு