நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி பல்வேறு அமளிகளுக்கு இடையில் நடைபெற்றுவருகிறது. அதில், முக்கியமாக பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி அமளிகள் நடைபெறுகின்றன.
அதனடிப்படையில், ஜூலை 26ஆம் தேதி, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மனீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தனர்.
அதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்களவையில் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து விவாதிக்கவும், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தவும் கோரிக்கைவிடுத்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார். இந்த நோட்டீஸ் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுரை விமான நிலையத்திற்கு அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை-மாணிக்கம் தாகூர்