ETV Bharat / bharat

ஜார்கண்டில் கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை! - ஹேமந்த் சோரென்

ஜார்கண்ட் மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Communist leader shot dead in Jharkhand Request to the Chief Minister to arrest the Mysterious people soon

author img

By

Published : Jul 27, 2023, 11:51 AM IST

Updated : Jul 27, 2023, 11:57 AM IST

ராஞ்சி (ஜார்கண்ட்): ராஞ்சியில் உள்ள தலதாலி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுபாஷ் முண்டா (Subash Munda) நேற்று (ஜூலை 26) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராஞ்சி எஸ்எஸ்பி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ராஞ்சி எஸ்எஸ்பி கிஷோர் கவுஷல் கூறுகையில், “சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து கோணங்களிலும் அனைத்து மட்டங்களிலும் வழக்கை விசாரித்து வருகிறோம். இந்த வழக்கை விரைவில் தீர்ப்போம்” என தெரிவித்தார்.

ராஞ்சி சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜேஷ்வர் நாத் அலோக் கூறுகையில், “சுபாஷ் முண்டா கொலைக்குப் பிறகு, ஏற்பட்ட போராட்டத்தின்போது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களிடம் பேசி வருகிறோம். குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அப்பகுதி தலைவராக இருந்த சுபாஷ் முண்டாவை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகவும், அதை அடுத்து வன்முறை ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலதாலி சௌக் பகுதியில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் சுபாஷ் முண்டா அவரது அலுவலகத்தில் இருந்தபோது நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், சுபாஷ் முண்டா மீது ஏழு தோட்டாக்களால் சுட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பிரகாஷ் விபல்வ் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் உள்ள கடைகளை சேதப்படுத்தினர் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். முண்டா இரண்டு முறை ஹதியா தொகுதியிலும், மாந்தர் தொகுதியில் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.

ஐஜி அமோல் வி ஹோம்கர், “சுபாஷ் முண்டா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுத்தது. கூடுதல் போலீஸ் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மேலும், போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர் பிரகாஷ் விபல்வ், “முண்டா கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்தார். இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். வியாழக்கிழமை நடைபெற உள்ள மாநிலக் குழுக் கூட்டத்தில் முண்டாவும் கலந்து கொள்ள இருந்தார். சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். மேலும் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைக்குமாறு முதலமைச்சர் ஹேமந்த் சோரெனிடம் வலியுறுத்தினோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகம் போல் டெல்லியில் அலப்பறை! ஆபாச வீடியோ கால் மூலம் மத்திய அமைச்சரிடம் பணம் பறிக்க முயற்சி! கும்பல் கைது!

Last Updated : Jul 27, 2023, 11:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.