புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள பலுதுங்குரி கிராமத்தில் நேற்றிரவு விளக்கில் இருந்து ஆடையில் தீப்பிடித்து பட்டதாரி மாணவி தீயில் கருகி உயிரிழந்தார்.
காவல்துறை அளித்த தகவலின்படி, உயிரிழந்த மாணவியின் பெயர் ஸ்வப்னேஸ்வரி. சம்பவத்தின் போது மண்ணெண்ணெய் விளக்கில் இருந்து மாணவி மீது தீப்பற்றியுள்ளது. இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. நவீன இந்தியாவில், இன்றளவும் பல்வேறு கிராமங்களில் மின்சார வசதி இல்லாமல் மக்கள் விளக்கை பயன்படுத்துவது பெரும் பின்னடைவாக இருக்கிறது.
இதையும் படிங்க: தர்மபுரியில் வைக்கோலுக்கிடையே எரிந்து கிடந்த பெண்ணின் உடல் மீட்பு!