உத்தரகாண்ட் மாநிலம் சமோலி பகுதியில் உள்ள பாங்டி என்ற கிராமத்தில் இன்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை பெய்தது. இதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் அப்பகுதியில் உள்ள வீடுகள், சாலைகள் பெரும் சேதத்திற்குள்ளாகின. பலரின் வாகனங்களும் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
உத்தரகாண்டில் அடிக்கடி மேகவெடிப்பு நிகழ்வு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட மேகவெடிப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தாண்டு தொடக்கத்தில் சமோலி மாவட்டத்தின் தபோவன்-ரேனி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மாநிலப் பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: ’வட கொரியாவைப் போல் ஆட்சி நடத்தும் மோடி’ - விவசாயிகள் தலைவர் காட்டம்