துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2.4 மெகாவாட் சோலார் மின் உற்பத்தித் திட்டத்தை தொடங்கிவைத்தார். அதன்பின் பேசிய அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதாவது, "கால நிலை மாற்றம் என்பது சர்வதேச அளவில் முக்கிய பிரச்னையாக எழுந்துள்ளது. இதை நாம் அடுத்த சில ஆண்டுகளில் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். பசுமை எரிசக்திகளான சூரியன், காற்று, நீர் ஆகியவற்றை மாற்று எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்.
பலரும் கால நிலை மாற்றம் என்ற பிரச்னையை எதிர்காலத்தில் வரும் பிரச்னையாக நினைக்கின்றனர். ஆனால், நாம் அதை தற்போதே சந்தித்துவருகிறோம். இதன் விழிப்புணர்வு கல்வி நிலையங்களில் இருந்து தொடங்க வேண்டும். மாணவர்கள் மாற்று எரிசக்தி குறித்து ஆய்வுகளை நடத்த வேண்டும்" என்றார்.
இவ்விழாவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 இரண்டாம் அலை காலத்தில் கார்ப்பரேட்கள் ரூ.1,600 கோடி உதவி