ஜார்க்கண்ட்: சைபாசாவில் அமைந்துள்ள சரண்டா காட்டில் போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 5 போலிசார் காயமடைந்தனர். இந்த மோதல் டோண்டோ மற்றும் கோயில்கேரா காவல் நிலைய எல்லையில் நடந்தது. இந்த சண்டையில் ஏராளமான நக்சலைட்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளதுடன், உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த 4 போலீசார் ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சிக்கு மேல் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
தாக்குதலில் 5 போலீசார் சுடப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக ராஞ்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: உ.பியில் காதலுக்காக மதம் மாறிய முஸ்லீம் பெண்கள்!