ETV Bharat / bharat

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மாணவி கடிதம் - பேருந்து சேவையைத் தொடங்கிய போக்குவரத்துக் கழகம் - நீதிபதிக்கு கடிதம்

தெலங்கானா மாநிலத்தில் வசிக்கும் பள்ளி மாணவி வைஷ்ணவி, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பேருந்து வசதி வேண்டி கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இன்று முதல் மாணவியின் கிராமத்திற்கு பேருந்து வசதி மீண்டும் தொடங்கப்பட்டது.

STUDENT VAISHNAVI LETTEr, RTC SERVICES RESTARTED, தெலங்கானா செய்திகள், மாணவி வைஷ்ணவி, கிராமத்துக்கு பேருந்து, தெலங்கானா மாநில போக்குவரத்து கழகம், நீதிபதிக்கு கடிதம், பள்ளி மாணவி நீதிபதிக்கு கடிதம்
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மாணவி கடிதம்
author img

By

Published : Nov 5, 2021, 5:26 PM IST

ரங்கா ரெட்டி (தெலங்கானா): கிராமத்திற்குப் பேருந்து வேண்டி உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மனு என்ற பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதியதன் விளைவாக, தற்போது பேருந்து வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சிடெடு கிராமத்தில் உள்ள மஞ்சலா பகுதியில் வசித்து வருவபர், 8ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவி வைஷ்ணவி. இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஏழ்மையில் குடும்பம் வாடியுள்ளது.

STUDENT VAISHNAVI LETTEr, RTC SERVICES RESTARTED, தெலங்கானா செய்திகள், மாணவி வைஷ்ணவி, கிராமத்துக்கு பேருந்து, தெலங்கானா மாநில போக்குவரத்து கழகம், நீதிபதிக்கு கடிதம், பள்ளி மாணவி நீதிபதிக்கு கடிதம்
பள்ளி மாணவி வைஷ்ணவி

இதன் காரணமாக வைஷ்ணவியின் பாட்டி வீட்டிற்கு, அவரது தாயாருடன் குடிபெயர்ந்துள்ளார். இச்சூழலில், கரோனா தொற்று காரணமாக, இந்தக் கிராமத்திற்கு பேருந்து வசதி நிறுத்தப்பட்டிருந்தது.

நியாயமான கோரிக்கை விட்ட மாணவி

தற்போது அனைத்துப் பள்ளிகளும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், வைஷ்ணவிக்கு பேருந்து வசதி இல்லாமல் பள்ளிக்குச் செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பள்ளி மாணவி பேருந்து வசதி வேண்டி கடிதம் வாயிலாக மனு அளித்துள்ளார்.

பேருந்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவி வைஷ்ணவி

உடனடியாக, அவரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநிலப் போக்குவரத்துத்துறைக்கு ஆணைப் பிறப்பித்தார். அந்த ஆணையைப் பின்பற்றி, இன்று முதல் சிடெடு கிராமத்திற்குப் பேருந்து வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மாணவியின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் அனைவரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர். பள்ளி மாணவியின் இந்த அசரா முயற்சிக்கு தெலங்கானா மாநிலப் போக்குவரத்துக் கழகச் செயல் அலுவலரும் தனது பாராட்டுகளை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை நிர்வாக அலுவலர் ட்வீட்

இதையும் படிங்க: சிசிடிவி பதிவு: நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய வாகனம் - தந்தை, மகன் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.