கேரள மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதலாகவே, திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. அதைப் போலவே, மத மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை.
இந்நிலையில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்கவும், வழிபாட்டு தலங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் அம்மாநில அரசு தற்போது அனுமதியளித்துள்ளது.
திரையரங்குகள் மீண்டும் திறப்பு
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வரும் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்கலாம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
பிற தளர்வுகள்
- வழிபாட்டுத் தலங்களில் திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகளுக்கு கேரள அரசு அனுமதித்துள்ளது.
- வழிபாட்டு தலங்கள் தவிர பிற பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. கலையரங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 நபர்களும், வெளியில் நிகழும் நிகழ்ச்சிகளில் 200 நபர்களும் கலந்து கொள்ளலாம்.
- விளையாட்டு, நீச்சல் பயிற்சி மையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட எண்ணிக்கை பார்வையாளர்களுடன் கண்காட்சிகள் நடத்தலாம்.
- பழங்குடி மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கும் விடுதிகளை கரோனா விதிமுறைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சாதி மனிதனை சாக்கடையாக்கும்: ஆந்திராவில் ஆணவக் கொலை...