தெலுங்கு திரைப்பட உலகின் பழம்பெரும் பிரபல இயக்குநரான கே. விஸ்வநாத்(92) உடல் நல குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கலையின் அழியாத் தன்மையையும், வாழ்வின் நிலையற்ற தன்மையையும் நன்கு அறிந்தவர் கலாதபஸ்வி விஸ்வநாத். அவரது கலை அவரது வாழ்நாளைக் கடந்தும் கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை. உங்களின் தீவிர ரசிகன். கமல்ஹாசன்” என தெரிவித்துள்ளார். இதே போல் பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது இரங்கல் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
Salute to a master . pic.twitter.com/zs0ElDYVUM
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Salute to a master . pic.twitter.com/zs0ElDYVUM
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2023Salute to a master . pic.twitter.com/zs0ElDYVUM
— Kamal Haasan (@ikamalhaasan) February 3, 2023
அதில், “நீங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளீர்கள், உங்களுடன் செட்டில் இருப்பது கோயிலில் இருப்பது போல் இருக்கும்” என தெரிவித்துள்ளார். இதே போல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் இவரது இறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “விஸ்வநாத் அவர்களின் இறப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இவரது இழப்பு இந்திய/ தெலுங்கு சினிமாவில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது” என தெரிவித்துள்ளார்.
-
Shocked beyond words!
— Chiranjeevi Konidela (@KChiruTweets) February 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Shri K Viswanath ‘s loss is an irreplaceable void to Indian / Telugu Cinema and to me personally! Man of numerous iconic, timeless films! The Legend Will Live on! Om Shanti !! 🙏🙏 pic.twitter.com/3JzLrCCs6z
">Shocked beyond words!
— Chiranjeevi Konidela (@KChiruTweets) February 3, 2023
Shri K Viswanath ‘s loss is an irreplaceable void to Indian / Telugu Cinema and to me personally! Man of numerous iconic, timeless films! The Legend Will Live on! Om Shanti !! 🙏🙏 pic.twitter.com/3JzLrCCs6zShocked beyond words!
— Chiranjeevi Konidela (@KChiruTweets) February 3, 2023
Shri K Viswanath ‘s loss is an irreplaceable void to Indian / Telugu Cinema and to me personally! Man of numerous iconic, timeless films! The Legend Will Live on! Om Shanti !! 🙏🙏 pic.twitter.com/3JzLrCCs6z
இதே போல் இயக்குநர் விஸ்வநாத்தி மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த மலையாள நடிகர் மம்முட்டி, “விஸ்வநாத் அவர்களின் இறப்பு செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். சுவாதி கிரணத்தில் அவர் இயக்கத்தில் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது. அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது பிரார்த்தனைகள்” என தெரிவித்துள்ளார்.
-
Deeply saddened by the demise of Sri K Viswanath Garu.
— Mammootty (@mammukka) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Had the privilege of being directed by him in Swathikiranam. My thoughts and prayers with his loved ones. pic.twitter.com/6ElhuSh53e
">Deeply saddened by the demise of Sri K Viswanath Garu.
— Mammootty (@mammukka) February 2, 2023
Had the privilege of being directed by him in Swathikiranam. My thoughts and prayers with his loved ones. pic.twitter.com/6ElhuSh53eDeeply saddened by the demise of Sri K Viswanath Garu.
— Mammootty (@mammukka) February 2, 2023
Had the privilege of being directed by him in Swathikiranam. My thoughts and prayers with his loved ones. pic.twitter.com/6ElhuSh53e
அவரது மறைவு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் இந்திய அளவில் மக்கள் மனம் எங்கும் நிறைந்துள்ள மகா கலைஞர் இயக்குநர் திரு. கலாதபஸ்வி விஸ்வநாத் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
புகழ் பெற்ற “சங்கராபரணம்” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அதே நாளில் திரு. கே. விஸ்வநாத் அவர்கள் மறைந்திருப்பது, அவரது தீராத கலைத்தாகத்தை காலக்கல்லில் கல்வெட்டாகச் செதுக்கிச் செல்லும் அரிய நிகழ்வாக அமைந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
-
Saddened by the passing away of Shri K. Viswanath Garu. He was a stalwart of the cinema world, distinguishing himself as a creative and multifaceted director. His films covered various genres and enthralled audiences for decades. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Saddened by the passing away of Shri K. Viswanath Garu. He was a stalwart of the cinema world, distinguishing himself as a creative and multifaceted director. His films covered various genres and enthralled audiences for decades. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 3, 2023Saddened by the passing away of Shri K. Viswanath Garu. He was a stalwart of the cinema world, distinguishing himself as a creative and multifaceted director. His films covered various genres and enthralled audiences for decades. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) February 3, 2023
பிரதமர் மோடி விஸ்வநாத் அவர்களின் மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”கே. விஸ்வநாத் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. சினிமா உலகின் தலைசிறந்தவராக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதே போன்று இந்தியா முழுவதும் பிரபலங்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பரியேறும் பெருமாள்' தங்கராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்!