ETV Bharat / bharat

இந்தியாவின் 11 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா - எல்லைப் பிரச்சினையில் மீண்டும் சீண்டுகிறதா?

இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீனா 3வது முறையாக பெயர் சூட்டி வரைபடம் வெளியிட்டு உள்ளது.

China
China
author img

By

Published : Apr 4, 2023, 10:18 AM IST

பீஜிங் : இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை தனக்கு சொந்தமானது என சீனா கூறி வருகிறது. மேலும் எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடும் சீனா, சட்டவிரோத குடியிருப்பு, தொலைத் தொடர்பு டவர்கள் அமைப்பது, பாலம் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

அவ்வப்போது எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களை சீண்டியும், வம்புக்கிழுத்தும் பல்வேறு அடிகளை சந்தித்து வருகீறது. இந்நிலையில், புதிய பிரச்சினையாக அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு 3 வது முறையாக பெயர் சூட்டி சீனா வரைபடம் வெளியிட்டு உள்ளது.

சீனா அமைச்சகத்தின் அத்துமீறிய இந்த அறிவிப்பால் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு சீன, திபெத்திய, பின்யின் எழுத்துகளில் பெயர் சூட்டியும், சில பகுதிகளை தெற்கு திபெத் என பெயர் சூட்டியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.2) சீன அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

இந்த 11 இடங்களை உள்ளடக்கிய அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளை தெற்கு திபத்தில் இருப்பதாக வரை படம் வெளியிட்டு உள்ள சீன அரசின் உள்விவகாரத் துறை அமைச்சகம், அதை ஜங்கன் மற்றும் தெற்கு திபெத் என்றும் பெயர் சூட்டி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சீன அமைச்சகம் பெயரிட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், தலா இரண்டு குடியிருப்புப் பகுதிகள், நிலப் பரப்பு மற்றும் இரண்டு ஆறுகள் உள்ளன. இவை அனைத்திற்கு தனித் தனியாக சீனா பெயரிட்டு வரைபடம் வெளியிட்டு உள்ளது. இதில் சீனா பெயரிட்டு உள்ள ஒரு பகுதி அருனாசல பிரதேச தலைநகர் இடா நகர் அருகே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அத்துமீறிய செயல்களில் சீனா ஈடுபடுவது புதிதல்ல. இதற்கு முன் இரு முறை இந்திய பகுதிகளுக்கு சீனா பெயரிட்டு சொந்தம் கொண்டாடி வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு இதே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கும், 2021 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக 15 இடங்களுக்கும் சீனா பெயரிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களின் பெயரை மாற்றும் சீன நடவடிக்கையை இந்தியா நிராகரித்தது. அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வழங்குவது இந்த உண்மையை மாற்றாது என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : Twitter Logo: ட்விட்டர் லோகோ மாற்றம் - தொடரும் மஸ்க்கின் அலப்பறைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.