இந்திய-சீன எல்லையான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கையின்போது இருதரப்பு ராணுவத்திற்கும் இடையே கடந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
மேலும், சீனத் தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவலை சீனா மறுத்தது. இப்போதுவரை, இந்திய தரப்பு பதிலடியில் உயிரிழந்த சீன வீரர்களின் எண்ணிக்கையை சீனா தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு ராணுவ அலுவலர், நான்கு சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘பீப்புள்ஸ் டெய்லி’யில் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதில், உயிரிழந்த நான்கு சீன வீரர்களுக்கும் சீனா விருது அறிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... கல்வான் தாக்குதல்: 4 வீரர்கள், ஒரு அலுவலர் உயிரிழந்ததாக சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!