நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் இந்தியாவில் சீனா ஆக்கிரமிப்பு குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
அதில், சீனாவும் பாகிஸ்தானும் மேற்கொண்ட எல்லை ஒப்பந்தத்தை இந்திய அரசு ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. இந்த ஒப்பந்தம் முறையற்றது என இந்திய அரசு கருதுகிறது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் ஒட்டுமொத்த பகுதிகளும் இந்தியாவைச் சேர்ந்தவை என பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு அரசு தொடர்ச்சியாக அறிவுறுத்திவருகிறது.
இருப்பினும், இந்தியாவின் எல்லையில் சுமார் 38,000 சதுர கிமீ நிலத்தை சீனா முறையின்றி ஆக்கிரமித்துள்ளது என அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உ.பி தேர்தலில் அகிலேஷ் கட்சிக்கே ஆதரவு - சீதாராம் யெச்சூரி