ETV Bharat / bharat

சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கடத்தல் - போலீஸார் சொன்ன அந்த வார்த்தை - பெற்றோர் முன்னே நடந்த சோகம்

சிறுமி கடத்தப்பட்ட சிசிடிவி வெளியான நிலையில், தங்கள் தரப்பு புகாரை எடுத்துக் கொள்ள போலீசார் மறுப்பதாகவும், சொந்த முயற்சியில் சிறுமியை தேடிக் கொள்ளுமாறு கூறியதாகவும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

சிறுமி கடத்தல்
சிறுமி கடத்தல்
author img

By

Published : Dec 5, 2022, 6:06 PM IST

ஜார்க்கண்ட்: தன்பாத் மாவட்டம், தன்டுசர் பகுதியைச்சேர்ந்தவர் கூலித்தொழிலாளி, அசோக் ரெவனி. கபரிஸ்தான் பகுதியில் கூலி வேலை பார்த்து வந்தவர், பணி முடிந்ததும் தன் மனைவி, மகன் மற்றும் ஒரு மாத பெண் குழந்தையுடன் சாலையோரத்தில் படுத்து தூங்கியுள்ளார்.

சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் கடத்திச்சென்றனர். சிறுமி கடத்தப்படுவது அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது போலீசார் புகாரை வாங்க மறுத்ததாகவும், சொந்த முயற்சியில் மகளை தேடிக்கொள்ளுமாறு கூறியதாகவும் அசோக் ரெவனி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சிறுமி காணாமல் போனது குறித்து எந்தப் புகாரும் வரவில்லை என்றும்; அப்படி புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் கூறினர்.

பெற்றொருடன் தூங்கிக் கொண்டு இருந்த ஒரு மாத சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயிலில் ரூ.100 கோடி காணிக்கை வசூல்; எத்தனை ஆண்டுகளில் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.