மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா ரயில் நிலையத்திலிருந்து கடந்த ஆக-24 அன்று ஒரு குழந்தை கடத்தப்பட்டது. தற்போது அந்த குழந்தை பாஜக பிரமுகரும், வார்டு கவுன்சிலருமான வினிதா அகர்வால் என்பவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவரது வீடு ஃபெரோஸ்பாத்தில் அமைந்துள்ளது. கடத்தப்பட்ட குழந்தை நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கொண்ட கும்பலால் விற்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாய் உறங்கிக்கொண்டிருந்தபோது கடத்தல்காரர் ஒருவர் லாவகமாக குழந்தையைத் தூக்கிச்செல்லும் காட்சி அருகிலுள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மதுரா நகர காவல்துறையினர் கூறுகையில், ‘ மதுரா ரயில் நிலையத்தில் 7 மாத குழந்தையின் தாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் குழந்தையைக் கடத்திச்செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளைத் தேடி வந்த போலீஸார் தற்போது 6 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளனர்’ என்றார்.
இதையும் படிங்க:ஹிஜாப் விவகாரம்... மேல்முறையீட்டு மனுக்கள் மீது கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு...