ETV Bharat / bharat

சிறார் ஆபாச வீடியோக்கள் பகிர்வு - நாடு முழுவதும் 59 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

சிறார் ஆபாச வீடியோக்கள் பகிர்வு தொடர்பாக இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 59 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Child
Child
author img

By

Published : Sep 24, 2022, 10:32 PM IST

டெல்லி: இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வீடியோக்கள் அதிகம் கிளவுட் ஸ்டோரேஜ் (cloud storage) முறையில் பகிரப்படுவதாகவும், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறார்களின் ஆபாசப் படங்கள் பகிரப்பட்டுள்ளதாகவும் இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை, சிபிஐக்கு தகவல் தெரிவித்தது.

இந்த தகவலின் அடிப்படையில், சிபிஐயில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து சிறார் ஆபாச வீடியோக்களை எடுத்தவர்கள், இணையத்தில் பகிர்ந்தவர்களை கண்டுபிடித்து, 21 மாநிலங்களில், 59 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், திண்டுக்கல் மாவட்டத்திலும் சிபிஐ சோதனை நடத்தியது.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனையில், 50-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சாதனங்களை ஆய்வு செய்தபோது, மிகப் பெரிய அளவில் சிறார் ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் அக்.2ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.