காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின்பேரில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தாண்டு பஞ்சாப் மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் அமரீந்தர் சிங்கிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்து மீது ராகுல், பிரியங்கா அபிமானம் கொண்ட நிலையில், அவர் கடந்த மாதம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சித்துவுக்கும் அமரீந்தருக்கும் பனிப்போர் நிலவ, இருவருக்கும் இடையேயான பூசலை கட்சி மேலிடம் தீர்த்துவைத்து வந்தது. சோனியா காந்தியின் நேரடி ஆசிபெற்றவர் அமரீந்தர்.
இருப்பினும், அமரீந்தர் ஆட்சியின் மீது அதிருப்தி இருப்பதாலும், வயது மூப்பின் காரணமாகவும் அவரை நீக்கி புதிய முகத்தை கொண்டுவர ராகுல் காந்தி தீர்மானமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சி மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பதவி விலகல் கடிதத்தை பஞ்சாப் ஆளுநரிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: மோடிக்கு தினமும் பிறந்தநாள் வந்தால் மகிழ்ச்சி - ப. சிதம்பரத்தின் வஞ்சப்புகழ்ச்சி