ETV Bharat / bharat

மூங்கிலால் ஆன ஸ்பீக்கர்; சத்தீஸ்கர் பெண்களின் அசத்தல்..!

சத்தீஸ்கரில் ஒரு மகளிர் சுய உதவிக் குழுவினர் மூங்கிலால் ஆன மின்சாரம் இல்லாமல் இயங்கும் செல்போன் மற்றும் டாப்லெட்களுக்கு ஒலியை மேம்படுத்தும் கருவியை (ஸ்பீக்கரை) உருவாக்கியுள்ளனர்.

மூங்கிலால் ஆன ஸ்பீக்கர்
மூங்கிலால் ஆன ஸ்பீக்கர்
author img

By

Published : Oct 20, 2022, 10:30 PM IST

கோர்பா: சத்தீஸ்கர் மாநிலத்தில் மூங்கில் மரத்திலிருந்து புல்லாங்குழல் போன்ற பல வகையான கருவிகள் மற்றும் கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கோர்பா மாவட்ட சுயஉதவிக்குழு பெண்கள் தடிமனான மூங்கில் துண்டுகளைப் பயன்படுத்தி ’மூங்கில் ஸ்பீக்கரை’ தயார் செய்துள்ளனர்.

மூங்கில் துண்டுகளின் இரு முனைகளிலும் வெட்டப்பட்டு, மூங்கில் நகராமல் இருக்க ஒரு சிறு கட்டை அதன் அடியில் பொருத்தப்பட்டுள்ளது. துண்டுகளின் மேல் பகுதியில் வெட்டப்பட்டு செல்போன், டேட்லெட்டுகள் உள்ளே நுழையும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட பகுதியின் வழியாக போனை வைத்தால் மூங்கில் துண்டு ஸ்பீக்கர் போல செயல்படுகிறது.

’Eco Dolby’ எனப்படும் மூங்கிலால் ஆன இந்த ஸ்பிக்கரின் விலை 160 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. செல்போனின் வெவ்வேறு அளவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கரின் அதிக பட்ச விலை ரூ. 250, இதில் ஒரு டேப்லெட்டை பொருத்த முடியும். இந்த ஸ்பீக்கர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தின் சி-மார்ட்டில் சுயஉதவிக் குழு பெண்களால் விற்கப்படுகிறது.

செல்போனில் ஒரு பாடலைப் ப்ளே செய்து அதை இந்த ஸ்பீக்கரில் பொருத்தும்போது, குறைந்தபட்சம் ஒரு அறை முழுவதும் சத்தம் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதற்கு மின்சாரம் தேவையில்லை. மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் இந்த கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த ஸ்வீட்; ஒரு கிலோ காஜு கலாஷ் 20 ஆயிரம் ரூபாயாம்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.