ETV Bharat / bharat

நிலத் தகராறு காரணமாக வெறிச்செயல்.. சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த கொடூரம்..

சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலத் தகராறு காரணமாக சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு கொலை
சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு கொலை
author img

By

Published : Feb 4, 2023, 3:19 PM IST

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள தன்னோட் கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக இரண்டு இளைஞர்கள் சொந்த தாய் மாமனை கொடூரமாக அடித்துக்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (பிப்.3) சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜான்ஜ்கிர் சம்பா போலீசார் கூறுகையில், தன்னோட் கிராமத்தை சேர்ந்த கோல்பஹாரா சாஹு என்பவருக்கும் அவரது தங்கை மகன்களான உத்தம் பிரசாத் சாஹு மற்றும் சந்தோஷ் சாஹு ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்த தகராறு காரணமாக கோல்பஹாரா சாஹு பக்கத்து கிராமத்துக்கு சென்றுள்ளார். இவரது கையெழுத்து இல்லாததால் பூர்வீக நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை. அதன் காரணமாக கோல்பஹாரா சாஹுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலத்தைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில், நேற்று ஜான்ஜ்கிர் சம்பாவில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்து அனைவரும் புறப்பட்டனர். அந்த நேரத்தில், அலுவலகம் முன்பு மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரசாத் சாஹு மற்றும் சந்தோஷ் சாஹு இருவரும் கோல்பஹாரா சாஹுவை சரமாரியாக தாக்கினர்.

அதன்பின் 60 மீட்டர் வரை தரதரவென இழுத்து சென்று அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து அவரது தலை, மார்பில் தாக்கினர். இந்த தாக்குதலில் கோல்பஹாரா சாஹு சம்பவயிடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது சர்ச்சையானதை அடுத்து போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து, கோல்பஹாரா சாஹு உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பிரசாத் சாஹு மற்றும் சந்தோஷ் சாஹு இருவரும் தலைமறைவாகினர்.

இருப்பினும், சில மணி நேரங்களில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை தொடர்பான வீடியோவை யாரும் பகிர வேண்டாம். அப்படி பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டெல்லி கஞ்சவாலா இளம்பெண் மரண வழக்கு - உள்ளுறுப்பு பரிசோதனை அறிக்கையை வைத்து போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.