சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேலின் தந்தையான நந்த் குமார் பகேல் செப்டெம்பர் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிராமண சமூதாயத்தினர் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு பிணை கிடைத்துள்ளது. பிராமணர்கள் எல்லாம் அந்நியர்கள் என்றும் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தகாகக் கூறி நந்த் குமார் மீது சர்வ பிராமண சமாஜம் என்ற அமைப்பு புகார் தெரிவித்து.
இந்த புகார் தொடர்பான வீடியோ ஆதரத்தையும் காவல்துறையிடம் அந்த அமைப்பு வழங்கியுள்ளது. பிணை கிடைத்ததை அடுத்து 75 வயதான நந்த் குமார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலையை காண குவிந்த பக்தர்கள்