ETV Bharat / bharat

தீப்பெட்டி வைத்து விளையாட்டு.. தீக்கிரையான குழந்தை! - சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் தீப்பெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீக்கிரையாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீயில் சிக்கிய குழந்தை
தீயில் சிக்கிய குழந்தை
author img

By

Published : Feb 15, 2023, 8:12 PM IST

சத்தீஸ்கர்: கொரியா மாவட்டத்தில் சோன்ஹத் பகுதியில் தீப்பெட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தவறுதலாக தீக்குச்சியை கொளுத்தி வைக்கோல் சேமிக்கப்பட்டுள்ள அறையில் போட்டுள்ளது. இதனால் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு அங்குள்ளவர்கள் கரும்புகை சூழ்ந்து காணப்பட்ட அறைக்கு விரைந்துள்ளனர்.

ஆனால், அதற்குள் தீயில் சிக்கிய குழந்தை உயிரிழந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது பெற்றோருடன் சோன்ஹத் சென்ற குழந்தை இவ்வாறு தீயில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார், உடற்கூராய்வு முடிந்தபின் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், கோடைகாலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்கள் பிரதிநிதி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குழந்தை இறந்ததற்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Godavari Express: கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.