போபால்: மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் சரக டிஐஜி விவேக் ராஜ் சிங், மட்லா கென் அருகே உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து, சுமார் 21 கிலோ மீட்டர் தூரம் ஓடி, மாவட்ட தலைமையகத்தை அடைந்துள்ளார். இந்த தூரத்தை இரண்டரை மணி நேரம் ஓடி கடந்துள்ளார்.
உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ வைரலாக பரவிவருகிறது. இதனிடையே டிஐஜி விவேக் ராஜ் சிங்கை காவல்துறையினர் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து டிஐஜி விவேக் ராஜ் சிங் கூறுகையில், "நான் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனது பரபரப்பான அலுவல்களில் இருந்து உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குகிறேன். இது என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. அதனால், அனைவரும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: உ.பி.யில் மசூதிகளில் ஒலி பெருக்கி அகற்றம் - ராஜ் தாக்ரே பாராட்டு!