ETV Bharat / bharat

உங்களிடம் இ-பைக் இல்லையா? - ஜூன் மாதம் முதல் சண்டிகரில் வருகிறது புதிய நடைமுறை! - e bike

இ-பைக் அல்லாத மற்ற புதிய இருசக்கர வாகனங்களின் பதிவுகளை, சண்டிகர் நிர்வாகம், நிறுத்த உத்தேசித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யூனியன் பிரதேச நிர்வாகத்தின், 2022 மின் வாகன கொள்கையின்படி, மின்சாரத்தினால் இயங்கவல்ல திறன் அற்ற புதிய இரு சக்கர வாகனங்களின் பதிவு, ஜூன் 1, 2023 முதல் சண்டிகரில் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

Chandigarh likely to stop registration of non-EV bikes from June
உங்களிடம் இ-பைக் இல்லையா? - ஜூன் மாதம் முதல் சண்டிகரில் வருகிறது புதிய நடைமுறை!
author img

By

Published : May 27, 2023, 1:32 PM IST

சண்டிகர்: சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய நகர்வின் ஒரு பகுதியாக, 2022ஆம் ஆண்டின் மின் வாகன கொள்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதால், மின்சாரம் அல்லாத இரு சக்கர மோட்டார் வாகனங்களின் பதிவை ஜூன் 1, 2023 முதல் நிறுத்துவதற்கு சண்டிகர் நிர்வாகம் தயாராக உள்ளது. இந்த EV (மின் வாகன) கொள்கை, ஐந்தாண்டுகளுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாகனங்களை, மக்கள் வாங்கி பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பதிவை படிப்படியாக நிறுத்தும் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது. EV (மின்சார வாகனங்கள்) கொள்கையின் முதல் ஆண்டில், 25,000 இ-சைக்கிள்கள், 1,000 இ-பைக்குகள் மற்றும் 3,000 கார்கள் உட்பட பல்வேறு வகைகளில் 42,000 வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம், கடந்த ஆண்டை விட, எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையை 10 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையை, 35 சதவீதமும் குறைக்க சண்டிகர் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, ஆட்டோமொபைல் துறையில், EV கொள்கையின் தாக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. சண்டிகர் நகரத்தில், சுமார் 17 இருசக்கர விற்பனை ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஷோரூமிலும் 60 முதல் 70 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர், இவ்வாறாக, நகரத்தில் மொத்தம் சுமார் 1,100 பேர் இந்த பணிகளில் உள்ளனர். மின் வாகன கொள்கை, அமல்படுத்தப்படுவதால், இவர்களின் பணிவாய்ப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

அதேநேரத்தில், சண்டிகர் நகரில் தற்போதைய காலகட்டத்தில் இ-பைக்குகளை பயன்படுத்துவது என்பது கஷ்டமான காரியம் ஆகும், ஏனெனில், தற்போது கோடைக் காலம் துவங்கி விட்டது. இதன்காரணமாக, வரும் நாட்களில், மின்வெட்டு மற்றும் மின் தடை அதிக அளவில் ஏற்படும் சூழல் உள்ளது. வீடுகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கே போதுமான மின்சாரம் வழங்க முடியாத நிலையில், இ-பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு எவ்வாறு மின்சாரம் வழங்க முடியும் என்ற கேள்வை எழுந்து உள்ளது.

ஹோண்டா பைக் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் மேலாளர் ரஞ்சன் கூறியதாவது, சண்டிகர் நகரத்தில் பெட்ரோல் வாகனங்களுக்கான பதிவு நிறுத்தப்படுவதால், வாடிக்கையாளர்கள், தங்களது புதிய வாகன பதிவுகளுக்கு மொகாலி அல்லது பஞ்சகுலாவை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், எங்களைப் போன்ற ஷோரூம் உரிமையாளர்களுக்கு, வேறு வழியே இல்லை. தற்போதைய நிலையில், தங்களது ஷோரூமில், 500 பெட்ரோல் பைக்குகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, ஒருவேளை மின்வாகன கொள்கை அமல்படுத்தப்படும் பட்சத்தில், விற்பனையாளர்கள் கடும் இழப்பை சந்திக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு, 40 நாட்களுக்கும் மேலாக, சண்டிகர் நகரத்தில், புதிய வாகன பதிவுகள் நிறுத்தப்பட்டு இருந்ததால், சண்டிகரில் இயங்கி வரும் சில ஷோரூம்கள், தங்களது இருப்பில் இருந்த வாகனங்களை, அதே விலைக்கு, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் செயல்பட்டு வரும் ஷோரூம்களுக்கு விற்பனை செய்திருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். இ-பைக்குகளில், பேட்டரி அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டு இருந்தால், அது வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பேட்டரி சேதம் அடைந்திருந்தால், அதை மாற்ற வேண்டும்.

பொதுமக்களிடம், இ-பைக் உள்ளிட்ட மின்சார வாகனங்கள் தொடர்பான விழிப்புணர்வு போதுமான அளவிற்கு இல்லை என்பதே மறுக்க முடியாத ஒன்று. சண்டிகர் நகரத்தில், இதை அமல்படுத்துவதற்கு முன், மின் வாகனங்களால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புண்ர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகே, மின்சார வாகன கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: சின்னகானல் நோக்கி நகரும் அரிசிகொம்பன் காட்டு யானை! வாழ்விடம் நோக்கி பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.