சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின்பேரில், அப்பகுதிக்கு கோப்ரா அதிரடிப்படையினர் விரைந்தனர். மாவட்ட ரிசர்வ் காவலர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் உயரடுக்கு பிரிவு கோப்ரா அதிரடிப்படையினரும் இணைந்த கூட்டுக்குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் அதிரடிப்படையினர் வனப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது, அவர்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடுமையாக நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தளபதி அர்ஜுன் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் தப்பியோடிய மாவோயிஸ்ட்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
அங்கிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் அதிக அளவு வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அண்மையில் பீஜப்பூரின் கங்களூர், மிர்தூர் மற்றும் பைரம்கர் பகுதிகளில் நடந்த பொதுமக்கள் படுகொலைகளில் அர்ஜுன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கடற்படை நாள்: 1971 போரை நினைவுகூர்ந்த கடற்படைத் தளபதி