உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 57 வயது நபருக்கு அக்டோபர் 22ஆம் தேதி ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் விமானப் படை அலுவலகத்தில் உள்ள விமானப் படை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், உத்தரப்பிரதேசத்திற்கு உயர்நிலை மருத்துவர் நிபுணர் குழுவை சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இக்குழுவில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மையம், டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைகளைச் சேர்ந்த பொது சுகாதாரம், தொற்று, மகப்பேறு, நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
ஜிகா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தக் குழுவினர், மாநில சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவர். இந்தக் குழு மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து செயல்பட்டு நிலைமையைக் கண்காணிக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் ஜிகா மேலாண்மைக்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் இந்தக் குழு பரிந்துரைக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்துவைத்த பிரதமர்