ETV Bharat / bharat

Same sex marriage: அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்க மத்திய அரசு முடிவு! - தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண வழக்கு

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், தன்பாலின தம்பதிகளுக்கு சமூக உரிமைகளை வழங்குவது தொடர்பாக நிர்வாக ரீதியாக ஆராய மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

SAME SEX
திருமணம்
author img

By

Published : May 3, 2023, 2:19 PM IST

டெல்லி: இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, கடந்த 27ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். தன்பாலினத் திருமணத்தில் சமூக பிரச்னைகள் நிறைந்திருப்பதால், இது குறித்து நாடாளுமன்றம் முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும் என்றும், இந்த விவகாரத்தை தீர்ப்புகள் மூலம் வரையறுப்பது மிகவும் கடினம் என்றும் துஷார் மேத்தா வாதிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டால், அவர்களுக்கான சமூக உரிமைகளை எப்படி பெறுவார்கள்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், தன்பாலின தம்பதிகள் கூட்டாக வங்கிக் கணக்கு தொடங்குவது, காப்பீடுகளில் நாமினிக்களை பரிந்துரைப்பது போன்ற அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழிகளை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஏழாவது நாளாக இன்று(மே.3) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, தன்பாலின தம்பதிகளின் திருமணத்துக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கும் விவகாரத்துக்குள் செல்லாமல், அவர்களின் சமூக உரிமைகளை வழங்குவதற்கு நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்.

இதற்காக அமைச்சரவை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக நிர்வாக ரீதியாக என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து மனுதாரர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் மேத்தா கூறினார்.

இதையும் படிங்க: The Kerala Story: தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படம் திரையிட வேண்டாம்: உளவுத்துறை வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.