ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் மத்தியப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பாஜக வேட்பாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் எல். முருகன், சர்பானந்தா சோனோவால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் எல். முருகன் மத்தியப்பிரதேசத்திலும், சர்பானந்தா சோனோவால் அஸ்ஸாமிலும் களம் காண்கின்றனர்.
இவர்கள் இருவரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில், போட்டியிடுவதற்காக போபாலிலுள்ள தேர்தல் அலுவலரிடம் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: எம்.பி.யாகிறார் அமைச்சர் எல். முருகன்