பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்கு அதிகரிக்க உதவும். விவசாயிகள் தங்களது விளைபொருளை நாட்டில் எங்கும் விற்க முடியும்.
விவசாயிகளை போராட்டங்களை நோக்கித் தூண்டிவிடும் காங்கிரஸ் கட்சியை கேட்கிறேன். நீங்கள் ஏன் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுக்கவில்லை. அல்லது நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஏன் பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனாவையோ திருத்தப்பட்ட எத்தனால் கொள்கையையோ உருவாக்கவில்லை? ஏனெனில் உங்கள் நோக்கம் சரியானதாக இல்லை. எனவே நீங்கள் விவசாயிகளை தூண்டிவிட்டு நாட்டின் அமைதியைக் குழைக்கின்றீர்கள்" என்றார்.