ETV Bharat / bharat

டெல்லி வந்த பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி - பிபின் ராவத் செய்திகள்

விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி அஞ்சலி
பிரதமர் மோடி அஞ்சலி
author img

By

Published : Dec 9, 2021, 10:19 PM IST

ராணுவ விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி மற்றும் 12 பேரின் உடல் இந்திய விமானப்படை விமானம் C-130J மூலம் இன்று மாலை 7.35 மணி அளவில் டெல்லி வந்தடைந்து.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் மற்றும் 12 பேரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பிபின் ராவத்தின் உறவினர்களுக்கு பிரதமர் அறுதல் தெரிவித்தார்.

முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவனே, கப்பல்படை தளபதி ஹரி குமார், விமானப் படை தளபதி வி ஆர் சௌத்ரி ஆகியோரும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விமானம் மூலம் வந்தடைந்த வீரர்களின் உடல்கள்

இதுவரை பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத், பிரிகேடியர் லிட்டர், லேன்ஸ் நாயக் விவேக் குமார் ஆகியோரின் நான்கு உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒன்பது பேரின் உடலை அடையாளம் காணும் பணி தொடர்ந்துவருகிறது.

மறைந்த பிபின் ராவத்தின் உடல் நாளை டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. அங்கு காலை 11 மணி முதல் மத்தியம் 12.30 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி அஞ்சலி

பின்னர் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ அலுவலர்கள் பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர். இறுதியாக நாளை மாலை பிபின் ராவத்தின் உடல் தகனம் செய்யப்படும்.

இதையும் படிங்க: தாய்மொழியில் பேச தயங்கிய பெண் எம்பி, உரையாற்ற ஊக்கமளித்த சபாநாயகர்... குவியும் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.