பெங்களூரு: கர்நாடகா மாநிலம் துமக்கூர் மாவட்டம் குனிகல்லில் நேற்று (பிப். 7) நடந்த பைக்-லாரி விபத்தில் இளைஞர் ஒருவர் நொடிப் பொழுதில் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சியில், அஞ்சேபாளையத்தை சேர்ந்த மனு என்ற இளைஞர், ஹாசன் பகுதியில் உள்ள சாலையோரமாக தனது இருசக்கர வானத்தை நிறுத்தி, அதன் மீது அமர்ந்து செல்போன் பேசி கொண்டுக்கிறார்.
அப்போது, பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மனுவை நோக்கி அதிவேகமாக வந்தது. இதை சுதாரித்துகொண்ட மனு நொடிப் பொழுதில் இருசக்கர வாகனத்தை விட்டு கீழிறங்கி விலகி சென்றார். இதையடுத்து லாரி இருசக்கர வாகனத்தில் மீது மோதி அதை இழுந்து சென்றது பதிவாகியிருந்தது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை. சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து, கூட்டத்தை அப்புறப்படுத்தினர். அதன்பின் இரண்டு வாகனங்களையும் சாலையின் ஓரமாக கொண்டுவந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காங்கிரஸ் பேனரை கிழித்த அரசு பள்ளி ஆசிரியர்