ETV Bharat / bharat

நீதிபதி உத்தவ் ஆனந்த் கொலை வழக்கு - இன்டர்போல் உதவியை நாடும் சிபிஐ - CBI also has submitted an application

பிரபல நீதிபதி உத்தவ் ஆனந்த் கொலை வழக்கு தொடர்பாக இன்டர்போல் உதவியை நாட சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை சிபிஐ கோரியுள்ளது.

Etv Bharatநீதிபதி உத்தவ் ஆனந்த் கொலை வழக்கு - இன்டர்போல் உதவியை  நாடும் சிபிஐ

author img

By

Published : Sep 17, 2022, 7:09 AM IST

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தின் நீதிபதி உத்தவ் ஆனந்த் கடந்த ஆண்டு ஜூலை 28 அன்று சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பின்னர் அது கொலை என உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகின்றனர்.

தற்போது தன்பாத்தின் பிரபல நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கில் மேலும் உண்மைகளை வெளிக்கொணர சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) உதவியை சிபிஐ பெற உள்ளது. இந்த வழக்கின் முடிக்கப்பட்ட முழு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது "இன்டர்போலின்" உதவியை நாடுவோம் என ஜார்கண்ட் புலனாய்வு குழுமம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.

இதற்கு அனுமதி கோரி உள்துறை அமைச்சகத்திடம் சிபிஐ விண்ணப்பித்துள்ளது. தற்போது இந்த கோரிக்கை நிலுவையில் உள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்த பின்னர், சிபிஐ விசாரணையை தொடங்கும். இதற்கிடையில் இந்த கொலை வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும் வழக்கின் முழு அறிக்கையை நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டாக்டர் ரவி ரஞ்சன் மற்றும் நீதிபதி சுஜித் நாராயண் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கின் விசாரணை முடிந்த பின்னரும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட ராகுல் வர்மா மற்றும் லக்கன் வர்மா இருவருக்கும் தன்பாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.இதைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் எப்படி விசாரணையைத் தொடரலாம் என புலனாய்வு அமைப்பிடம் கேட்டது .

இதற்கு பதிலளித்த புலனாய்வு அமைப்பு, கேரள உயர் நீதிமன்றம் முன்னதாக அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, புதிய உண்மைகளை எதிர்பார்க்கும் பட்சத்தில் எந்த வழக்கிலும் சிபிஐ விசாரணையைத் தொடரலாம் என்று கூறியது.

இதையும் படிங்க:யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோத சூளைகள் மூடப்படும் - தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.