பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிவாஜி நகர் எம்எல்ஏவான ரோஷன் பெய்க் காங்கிரஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்.
இவர் கர்நாடக மாநிலத்தை தளமாகக் கொண்ட ஐஎம்ஏ எனப்படும் ஐ-நாணய ஆலோசனை நிறுவனங்கள் நடத்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களில், சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
முகம்மது மன்சூர் கான் என்பவர் தன்னிடமிருந்து ரோஷன் பெய்க் 400 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று (நவ.22) சிபிஐ-ஆல் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது 14 நாள் நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், சிபிஐ இன்று காலை முதலே ரோஷன் பெய்க் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்பு உள்ளது எனவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பாஜகவுடன் தொடர்பில் உள்ளேன் - காங்கிரஸ் எம்எல்ஏ