ETV Bharat / bharat

டெல்லி மதுபான வழக்கில் மணீஷ் சிசோடியா முக்கிய குற்றவாளி? - அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபான முறைகேட்டில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது. அதேநேரம் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மணீஷ் சிசோடியாவை முக்கிய குற்றவாளி எனக் கூறப்பட்டு உள்ளது.

Manish Sissodia
Manish Sissodia
author img

By

Published : May 4, 2023, 9:29 PM IST

டெல்லி தலைநகர் டெல்லியை உலுக்கிய மதுபான முறைகேட்டு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, கடந்த 2021 - 22ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் உள்ள சில முக்கிய விஷயங்கள் முன்கூட்டியே கசியவிடப்பட்டதாகவும், அதனால், சில தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதற்கு கைமாறாக அரசியல் கட்சியினர் பெரும்தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த முறைகேட்டில் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் வரை சம்பந்தப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை செய்தார்.

முறைகேடு புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இதே விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்து உள்ளதாகக் கூறி அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து தனியாக விசாரித்து வருகிறது. இந்தப் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான மதுபானத் துறையை தன் வசம் வைத்து இருந்த டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மணீஷ் சிசோடியாவை, கடந்த மார்ச் மாதம் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தொடர் விசாரணையில் மணீஷ் சிசோடியா உள்ளார். மதுபான முறைகேட்டு வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மணீஷ் சிசோடியாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் கடந்த சில நாட்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில், மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். உடலில் ஏற்படும் திசுக்கள் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வரும் மனைவியை உடனிருந்து கவனித்துக் கொள்ள அனுமதிக்குமாறு மணீஷ் சிசோடியா ஜாமீன் மனுவில் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தை சிபிஐ நாடி உள்ளது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மணீஷ் சிசோடியாவின் மனைவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும், அந்த உண்மையை மனுவில் மணீஷ் சிசோடியா மறைத்து ஜாமீன் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிபிஐ தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனுவை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக டெல்லி மதுபான முறைகேட்டு வழக்கில் 5வது முறையாக குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்து உள்ளது.

குற்றப்பத்திரிகையில் மணீஷ் சிசோடியாவை முக்கியக் குற்றவாளி என அமலாக்கத்துறை குறிப்பிட்டு உள்ளது. மதுபான முறைகேட்டு வழக்கில் மணீஷ் சிசோடியா உள்பட 12 பேரை கைது செய்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையும் படிங்க : Bihar: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை - பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.