கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மேற்குவங்கத்தில் சுரங்கங்களிலிருந்து நிலக்கரி கடத்தப்படுவதாக மஞ்சி, அமித் குமார் தார், ஜெயேஷ் சந்திர ராய், தன்மய் தாஸ் உள்பட பலருக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
இதனிடையே, நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பந்தோபாத்யாயுக்கு சிபிஐ நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸ் அனுப்பி அச்சுறுத்திவிடலாம் என யார் நினைத்தாலும் அது ஒருபோதும் நடைபெறாது என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ருஜிராவின் சகோதரியான மேனகா கம்பீருக்கு சிபிஐ இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அலுவலர்களை சந்தித்து விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சிபிஐயின் நோட்டீஸுக்கு ருஜிரா பதிலளித்திருந்தார். ருஜிராவின் வங்கி கணக்கில் அதிக அளவிலான பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பணப்பரிமாற்றத்தை நிலக்கரி கடத்திலில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்டிருக்கலாம் என சிபிஐ அலுவலர்கள் சந்தேகிக்கின்றனர்.