டெல்லி: கால்நடை கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவர் என கருதப்படும் பினாய் மிஷ்ரா ஜனவரி 4ஆம் தேதி ஆஜராகவேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
நேற்று காலை சிபிஐ பினாய் மிஷ்ரா வீட்டில் சோதனை மேற்கொண்டது. மேலும், மிஷ்ரா நாட்டை விட்டு தப்பாமல் இருக்க சிபிஐ அவரை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது.
கால்நடை கடத்தல் வழக்கில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி எனமுல் ஹக் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசத்துக்கு கால்நடைகளை கடத்தியதாக சிபிஐ குற்றஞ்சாட்டியது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக சதீஷ்குமார் என்ற முன்னாள் கமாண்டரையும் சிபிஐ கைது செய்துள்ளது.
சிபிஐ மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மேற்குவங்க - வங்கதேச எல்லைகளில் பணியாற்றும் எல்லைப்பாதுகாப்பு படைப்பிரிவிலுள்ள சிலரின் உதவியோடு கால்நடைகள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'கால்நடை கடத்தப்படுவது எல்லையில் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது'- எல்லை பாதுகாப்பு படை!