உத்தரகாண்ட் மாநிலத்தில், நைனிடால் மாவட்டத்தைச்சேர்ந்த ஓட்டுநர் உட்பட 6 பேர் காரில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச்சம்பவம் குறித்துப்பேசிய அப்பகுதி காவல் துறை மூத்த காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் பாட் பேசுகையில் 'வியாழக்கிழமை இரவு (ஜூன் 9) அன்று குருத்வாரா ரீத்தா சாஹீப்பில் இருந்து ஹல்த்வனி நோக்கி சென்ற கார், தெரி மாவட்டத்தில் உள்ள ஒக்ஹல்கண்டா என்னும் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். காரின் ஓட்டுநர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம்’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய பெண் பக்தர்