ETV Bharat / bharat

அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு... 4 பேர் உயிரிழப்பு! - 5 பேர் உயிரிழப்பு

கலிபோர்ர்னியாவில் உள்ள ஆரஞ்ச் கவுண்டியின் டிராபுகோ கேன்யனில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

California
கலிபோர்னியா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 1:32 PM IST

அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள ஆரஞ்ச் கவுண்டியின் டிராபுகோ கேன்யனில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. குக் கார்னர் என்ற இடத்தில் இந்த துப்பாக்கி சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய விவரங்கள் பகிரப்பட வில்லை. இதில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டினால் மேலும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் 5 பேர் துப்பாக்கி சூடு காயங்களுடன் உள்ளதாக கலிபோர்னியா போலீசார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய வரும் சூட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: நேபாளில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து; 8 பேர் உயிரிழப்பு - மீட்புப்பணிகள் தீவிரம்!

இது குறித்து கலிபோர்னியா ஆளுநர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "குக் கார்னர் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொது மக்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் குறித்து தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பவ இடத்தில் ஏராளமான ரோந்து கார்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த சம்வத்தை கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசோம், இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் சீக்கிய குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.