புவனேஸ்வர்: 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தும் விதமாக அமைச்சரவையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் லத்திகா பிரதான் உள்ளிட்டோர் சேர்க்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் வரும் 20ஆம் தேதி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். அதனால், அவரது பயணத்திற்கு முன்னதாக, இன்று (ஜூன் 5) புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைச்சர்கள் அனைவரும் பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவை தலைவர் சுர்ஜ்ய நாராயண் பட்டோவும் ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: உயிரோடு இருக்கும் பெண்ணை இறந்ததாக கூறிய மருத்துவர்கள்