ETV Bharat / bharat

இடைத்தேர்தல் 2021: மே.வங்கத்தில் மம்தா; இமாச்சல், ராஜஸ்தானில் காங்கிரஸ்; அசாமில் பாஜக - மேற்கு வங்கம் இடைத்தேர்தல்

மேற்கு வங்காளம், அசாம், ஒரு ஒன்றிய பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸும், இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் காங்கிரஸும், அசாம், தெலங்கானா மாநிலத்தில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது.

Bypolls results 2021, BJP in Assam, காங்கிரஸ் வெற்றி, பாஜக வெற்றி, திரிணாமூல் காங்கிரஸ், இடைத்தேர்தல் 2021, தெலங்கானா இடைத்தேர்தல், ராஜஸ்தான் இடைத்தேர்தல், கர்நாடகம் இடைத்தேர்தல், மேற்கு வங்கம் இடைத்தேர்தல், இமாச்சல பிரதேசம் இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் 2021
author img

By

Published : Nov 3, 2021, 9:36 AM IST

ஹைதராபாத்: மேற்கு வங்காளம், அசாம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், தெலங்கானா, உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

விரைவில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

மேற்கு வங்காளத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. நான்கு தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதில் இரு இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி நகர்வை தொடங்கும் காங்கிரஸ்

பாஜக ஆளும் இமாச்சல பிரதேசத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

இமாச்சல பிரதேசம் மந்தி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மத்திய பிரதேசம் கந்த்வா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது.

அசாமில் பாஜக

அசாம் மாநிலத்தில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான யூ.பி.பி.-எல் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது.

மத்திய பிரதேசத்தில் பாஜக இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. கர்நாடகாவில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.

ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

ஹரியானாவில் ஒரு இடத்தை காங்கிரசும், மேகாலயாவில் ஒரு இடத்தை என்.பி.பி.யும், மற்றொரு இடத்தை யு.டி.பி. கட்சியும் பிடித்தன. பிகாரில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், இரண்டு இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றியது. தாத்ரா ஒன்றிய பிரதேசத்தில் மக்களவை இடைத்தேர்தலில் சிவசேனா கட்சி வெற்றி பெற்றது.

வெற்றிபெற்ற அனைத்து கட்சி தொண்டர்களும் ஆங்காங்கே தங்களின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக பாஜக ஆளும் மாநிலத்தில் தங்களின் பலத்தை நிரூபித்துள்ள காங்கிரஸ் கட்சி, அந்த வெற்றியை தொண்டர்கள் சூழ கொண்டாடி வருகிறது.

இதையும் படிங்க: யோகி vs பிரியங்கா: உ.பி., தேர்தலுக்கு சல்மான் குர்ஷித் சொல்லும் ஐடியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.