மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 35 வயது பெண் ஒருவரை 75 வயது தொழிலதிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் மீது அம்போலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அந்த தொழிலதிபர் இந்த வழக்கால், அவரது தொழில் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்த வழக்கை எடுக்கக் கூடாது என காவல் துறையினரையும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து மும்பை காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அம்போலி காவல் நிலையத்தில் 35 வயதான எழுத்தாளர் ஒருவர் அளித்தப் புகாரின் பேரில், தாதரில் வசிக்கும் 75 வயதான தொழிலதிபர் மே மாதம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து தொழிலதிபர் 2 கோடி ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு திருப்பித்தரவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தொழிலதிபர் தாவூத் இப்ராகிம் என்ற ரவுடியின் பெயரை வைத்து அந்தப் பெண்ணை நேரடியாக மிரட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், 'தாதா தாவூத் இப்ராகிம் அவரது நண்பர் எனவும்; ஹாஜி மஸ்தான் எனது மனைவியின் சகோதரியின் கணவர்' என்றும் கூறி மிரட்டியுள்ளார்.
இது குறித்து வெளியே தெரிந்தால் கொலை செய்துவிடுவதாக, அந்த தொழிலதிபர் மிரட்டியதாக அந்தப் பெண் கூறியுள்ளார். அம்போலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மேல் விசாரணைக்காக அந்தேரி எம்ஐடிசி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பெண் அளித்த புகாரின்படி, போலீஸார் வெள்ளிக்கிழமை IPC பிரிவு 376 (2) N, 504இன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சொந்த ஊருக்கு வந்த மத்திய போலீஸ் தற்கொலை