தட்சிண கன்னடா: பெங்களூரு- மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரியும்- தனியார் பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
மங்களூருவிலிருந்து பெங்களூருவுக்கு தனியார் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்து தட்சிண கன்னடா மாவட்டம் நெல்யாடி அருகேயுள்ள மண்ணாகுடி அருகே லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மேலும், மோதிய வேகத்தில் சரக்கு லாரியும், தனியார் பேருந்தும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
அப்போது சுதாரித்துக் கொண்ட பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து வேகவேகமாக இறங்கி மயிரிழையில் உயிர் தப்பினர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் காவலர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.