2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையில் பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சகத்திற்கு ரூ.7,524.87 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இந்த அமைச்சகத்திற்கு திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கைத் தொகை ரூ.5,508 கோடியாக இருந்த நிலையில் இந்தாண்டு ஒதுக்கீடு 36.62 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான விரிவான விளக்கம் அளிக்க அமைச்சகத்தின் செயலாளர் ஆர். சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2014-15ஆம் ஆண்டு பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிதித்தொகையை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போதைய ஒதுக்கீடு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.
இந்த ஒதுக்கீடுகள் முறையாக மக்களிடம் சென்று சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். மேலும், 20,000 பழங்குடி மக்களோ அல்லது மக்கள்தொகையில் 50 விழுக்காட்டிற்கு மேல் பழங்குடி மக்கள் கொண்ட பகுதிகளில் ஏகலையவன் பள்ளிகள் திறந்துவைக்கப்படும்.
2022ஆம் ஆண்டுக்குள் 740 ஏகலையவன் பள்ளிகள் திறந்துவைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி முதலில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - தயாநிதி