ETV Bharat / bharat

நாடு முழுவதும் 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் - நிர்மலா சீதாராமன் - நிதிநிலை அறிக்கை 2023

நாடு முழுவதும் 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் அமைக்க விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.3,116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கூடுதல் விமான நிலையங்கள்
கூடுதல் விமான நிலையங்கள்
author img

By

Published : Feb 1, 2023, 5:14 PM IST

டெல்லி: உள்நாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிக்க நாடு முழுவதும் 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்கள் அமைக்க விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ரூ.3,116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அதேபோல ஏரோட்ரோம்கள் மற்றும் முன்கூட்டியே தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும். ஓய்வுபெற்ற விமான ஊழியர்களின் மருத்துவப் பலன்களுக்காக 165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு ரூ.10,667 கோடி ஒதுக்கப்பட்டது.

இதில் ரூ.600.7 கோடி பிராந்திய இணைப்புத் திட்டமான UDAN (Ude Desh Ka Aam Nagrik) திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது எனத் தெரிவித்தார். அதேபோல நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 9 மடங்கு அதிகமாக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதைகள் அமைத்தல், ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், ரயில் நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலைவாய்ப்பை உருவாக்க மூலதன செலவினம் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு - நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.