ETV Bharat / bharat

மாநில தேர்தல்களில் தனித்து களம் காணும் மாயாவதி!

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாயாவதி
மாயாவதி
author img

By

Published : Mar 15, 2021, 7:29 PM IST

லக்னோ: தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் தனித்து களம் காணவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்ஷி ராமின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாயாவதி, "நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது.

இந்த நான்கு மாநிலங்களில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை. கட்சியின் மாநிலத் தலைவர்கள் ஆற்றுலுடன் பணியாற்றி நல்ல விதமான முடிவுகளைப் பெற வேண்டுகோள் விடுக்கிறேன். தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள், இஸ்லாமியர்கள் கண்ணியமிக்க வாழ்க்கையை வாழ பகுஜன் சமாஜ் தொடர்ந்து பணியாற்றிவருகிறது. அவர்களை தயார்ப்படுத்த கடுமையாக உழைத்துவருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: லவ் ஜிகாத் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மாயாவதி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.