பாகிஸ்தான் - சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் சர்வதேச எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க எல்லை பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கட்ச் மாவட்ட சர்வதேச எல்லையில் பிஎஸ்எஃப் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளது.
![BSF](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/gj-kutch-02-alert-on-kutch-border-before-independence-day-photo-story-7209751_27072021102435_2707f_1627361675_121_2907newsroom_1627547647_859.jpg)
கட்ச் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவிய சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளதால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15, ஜனவரி 26 ஆம் தேதிகளுக்கு முன்பு எச்சரிக்கை விடுவது வழக்கம். மேலும், எல்லை பாதுகாப்புப் படையினர், கடலோர காவல் படையினர், கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் அப்பகுதியில் ஈடுபட்டுள்ளனர்.
![BSF](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/gj-kutch-01-high-alert-security-enhanced-on-indo-pak-border-of-kutch-photo-story-7209751_28072021204637_2807f_1627485397_324_2907newsroom_1627547647_956.jpg)
இதுகுறித்து நமது ஈடிவி பாரத்துடன் தொலைபேசி வாயிலாக பேசிய பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜி.எஸ்.மாலிக், " ஆகஸ்ட் 15 அன்று குஜராத் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் தலைமையகத்தில் குறைந்தபட்ச ஊழியர்களே இருப்பார்கள். மற்றவர்கள் அனைவரும் எல்லையில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுவார்கள். கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 7 கோடி ஃபாலோயர்ஸ்: மாஸ் காட்டும் மோடி