ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: பாதுகாப்பு பணியிலிருந்த பி.எஸ்.எஃப் துணை ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு - பாதுகாப்பு பணியிலிருந்த பி.எஸ்.எஃப் துணை ஆய்வாளர் உயிரிழப்பு

பாட்னா: லல்கஞ்ச் தொகுதி வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆய்வாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

BSF official dies of heart attack
BSF official dies of heart attack
author img

By

Published : Nov 3, 2020, 4:43 PM IST

பிகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி முடிவடைவதால், அம்மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இன்று (நவ்-3) காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

பிகாரில், தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முகக்கவசம், தகுந்த இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு மையத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க காவலர்கள், எல்லை பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைசாலி மாவட்டம், லல்கஞ்ச் தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையம் ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆய்வாளர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதைப் பார்த்து பதறிய சக பாதுகாப்பு படையினர், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஹாஜிபூர் சதர் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பணியின்போது உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆய்வாளர் கே.ஆர். பாய் (55), குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.