எல்லையில் நிலவும் பதற்றத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ஒழிக்க, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு நிலைகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் போபியான் கிராமத்தில் சர்வதேச எல்லை அருகே எல்லை படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ரகசிய சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவலை எளிதாக்க கட்டப்பட்ட சுரங்கமாக இருக்கும் என கருதப்படுகிறது. இத்தகவலையடுத்து, அப்பகுதிக்கு எல்லை பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் விரைந்துள்ளனர்.