தோல்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியில் உள்ள பர்வதி நதிப் படுகை அருகே சாக்குப் பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நான்கு சாக்குப் பைகளில் துண்டு துண்டாக இருந்த உடல் பாகங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், இறந்தவர் பகாபுதீன் கான் என்றும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்துவாக மாறி அங்குள்ள சாமுண்டி மாதா ஆலயத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட சாதுவின் உடல் பாகங்களைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அதேபகுதியில் உள்ள மற்றொரு ஆலயத்தில் இருந்து தலைமறைவான 4 சாதுக்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத், ஒடிசாவில் கரோனா பி.எஃப் 7 வைரஸ் கண்டுபிடிப்பு! - மீண்டும் கரோனாவா?